/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆட்டோ டிரைவரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு பதிவு
/
ஆட்டோ டிரைவரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு பதிவு
ஆட்டோ டிரைவரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு பதிவு
ஆட்டோ டிரைவரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 05, 2024 10:31 PM
பந்தலுார் : சேரங்கோடு ஊராட்சி பகுதியில், 9-வது வார்டுக்கு உட்பட்ட புஞ்சை கொல்லி, சப்பந்தோடு, காவயல் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைந்து வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் உள்ளன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் சீரமைக்கவில்லை.
இதனால், மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, அறிவிப்பு பலகை வைத்தனர். அதில், பங்கேற்ற ஆட்டோ டிரைவர் மணிகண்டன், 26, என்பவர் நேற்று முன்தினம் மாலை, ஆட்டோ ஓட்டி சென்றபோது, வார்டு கவுன்சிலரான தி.மு.க.வை சேர்ந்த வினோத் கண்ணா என்பவர் தகராறில் ஈடுபட்டு, மணிகண்டனை தாக்கி உள்ளார்.
காயமடைந்த வினோத், சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத் கண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.