/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சி.சி.டி.வி., கேமரா செயலிழப்பு விவகாரம்: தொழில்நுட்ப இடையூறு சரி செய்யப்பட்டதாக தகவல்

ADDED : ஏப் 28, 2024 09:07 PM
ஊட்டி:ஊட்டியில் ஓட்டு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள, சி.சி.டி.வி., கேமராக்கள் செயலிழந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப் பதிவு, கடந்த, 19ல் நடந்து முடிந்தது. பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (இ.வி.எம்) மற்றும் ஓட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (வி.வி.பேட்) ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடக்கிறது.
இந்நிலையில், தொழில் நுட்ப இடையூறு காரணமாக, ஓட்டு எண்ணும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள, 173 கண்காணிப்பு கேமராக்கள், கடந்த, 27ம் தேதி மாலை, 6:17 மணி முதல், 6:43 வரை செயல் இழந்தது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது சீராக இயங்கி வருகிறது.
இந்நிலையில், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் ஒரு பிரதிநிதி தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' நிலையை பார்ப்பதற்கு, தேர்தல் அலுவலர் அனுமதியின் கீழ் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.