/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தல் கால் அமைக்க மத்திய அரசு மானியம்
/
பந்தல் கால் அமைக்க மத்திய அரசு மானியம்
ADDED : ஜூன் 26, 2024 10:01 PM
பெ.நா.பாளையம் : காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர பந்தல் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இது குறித்து, தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர பந்தல் அமைத்து சாகுபடி செய்ய மிகப்பெரிய பொருட் செலவு ஆகிறது.
இதனால் மத்திய அரசு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, ஏக்கருக்கு ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு ஹெக்டருக்கு, 3 லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்குகிறது.பந்தல், காய்கறிகள், திராட்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளின் நிலம் காலி இடமாக இருத்தல் வேண்டும். புதிதாக கல் கால் அமைக்க வேண்டும். இத்திட்டத்தை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதி தோட்டக்கலை துறையினரை அணுகி பயன்பெறலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.