/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய நலத்திட்டங்கள் பதிவு செய்ய முகாம்
/
மத்திய நலத்திட்டங்கள் பதிவு செய்ய முகாம்
ADDED : ஜூலை 08, 2024 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில், மத்திய அரசின் நலத்திட்ட விழிப்புணர்வு மற்றும் பதிவு செய்தல் முகாம் நடந்தது.
முகாமில், மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா திட்டம், அடல் பென்ஷன் திட்டம்,தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து, பதிவு செய்தல் பணிகள் நடந்தன.
முகாமை, தொழிலாளர் கல்வி வாரிய கல்வி அதிகாரி செண்பகராஜன் துவக்கி வைத்தார். முகாம் ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.