/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரு வாரம் நீடித்த உருளை விலையில் மாற்றம் கிலோ ரூ.70க்கு ஏலம்
/
இரு வாரம் நீடித்த உருளை விலையில் மாற்றம் கிலோ ரூ.70க்கு ஏலம்
இரு வாரம் நீடித்த உருளை விலையில் மாற்றம் கிலோ ரூ.70க்கு ஏலம்
இரு வாரம் நீடித்த உருளை விலையில் மாற்றம் கிலோ ரூ.70க்கு ஏலம்
ADDED : ஜூலை 05, 2024 01:34 AM

ஊட்டி:ஊட்டியில், கடந்த இரு வாரங்களாக நீடித்து வந்த உருளை கிழங்கு விலை நேற்று குறைந்தது.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக, 20 ஆயிரம் ஏக்கரில் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில், ஏப்., இறுதி வரை மழை பெய்யவில்லை.
ஜன., முதல், ஏப்., இறுதி வரை கோடை மழை, 15 செ.மீ., தான் பெய்தது. மழை பொழிவு குறைவால் விதைப்பு பணி மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டினர். தாமதமாக மே, இரண்டாவது வாரம் வரை பரவலாக பெய்து, 10 செ.மீ., மழை அதிகரித்தது. கோடை மழையின் சராசரி அளவு, 40 செ.மீ., 25 செ.மீ., மழை பெய்துள்ளது. தற்போது, தென்மேற்கு பருவமழை இதுவரை எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
உருளை விலை குறைந்தது
போதிய அளவு மழை இல்லாததால் விவசாயிகள் எதிர்பார்த்த அளவு விவசாயம் மேற்கொள்ளவில்லை. வரத்து குறைந்ததால், ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் சந்தைக்கு மலை காய்கறிகள் குறைந்தளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊட்டி மார்க்கெட்டுக்கு தினமும் சராசரியாக, 40 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில மாதங்களாக, 20 டன் முதல், 25 டன் வரைக்கு விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவால் அனைத்து வகையான மலை காய்கறிகளும் விலை உயர்ந்தது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு, 130 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜ முகமது கூறுகையில்,''ஊட்டி உருளை கிழங்கிற்கு மணம், ருசி இருப்பதால் பிற இடங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வரத்து குறைந்ததால் கடந்த இருவாரங்களாக, கிலோ, 130 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று( நேற்று) கிலோ, 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த இரு வாரமாக நீடித்து வந்த உருளைகிழங்கு விலை குறைந்துள்ளது,'' என்றார்.