/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் கோடை சீசன்; போக்குவரத்தில் மாற்றம்
/
ஊட்டியில் கோடை சீசன்; போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஏப் 26, 2024 01:58 AM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சுற்றுலா தலங்களை ரசித்து செல்லும் வகையில், மாவட்ட போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி, நாளை, 27 மற்றும் 28 ம் தேதி மற்றும் கோடை விழாவான மே, 1ம் தேதி முதல் மே, 31ம் தேதி வரை, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னுார் வழியாக ஊட்டிக்கு வரவேண்டும்.
ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக அனுமதிக்கப்படுகிறது. மேலும், கூடலுார்; கோத்தகிரியிலிருந்து ஊட்டிக்கு வரும் வாகனங்கள் மற்றும் ஊட்டி நகரிலும் உள்ளூர் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

