நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டி நகராட்சியின் பல பகுதியில் இரவில் பைக்கில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்துவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி நகரில் தெருநாய்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள், இரவில் பைக்கில் செல்லும் நபர்களை துரத்துவதால், அவர்கள் அச்சத்தில் பைக்கை வேகமாக ஓட்டி சென்று மழையில் வழுக்கி விழும் சூழல் ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.