ADDED : பிப் 25, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி,; கோத்தகிரியில் மக்கள் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
மாநிலம் முழுவதும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மலிவு விலையில் நோய் காக்கும் மருந்துகள் வழங்க மக்கள் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக, மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, கோத்தகிரி கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் இயங்கும் மருந்தக விற்பனையை தலைவர் வடிவேல் துவக்கி வைத்தார்.
பண்டகசாலை செயலாளர் வனிதா, இயக்குனர்கள் பார்த்திபன், சில்லபாபு உட்பட, ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.