/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்பு
/
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்பு
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்பு
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்பு
ADDED : செப் 03, 2024 02:25 AM

கூடலுார்:கூடலுாரில் வி.எச்.பி., சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில், குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள முனீஸ்வரன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. வி.எச்.பி., மாவட்ட இணை செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பெற்றோருடன் பங்கேற்றனர்.
ஊர்வலம் மைசூரு- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று, விநாயகர் கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஊர்வலத்தில் வி.எச்.பி., மாவட்ட துணை தலைவர் சசி, நகர செயலாளர் ராகுல் ராமு, சிவன்மலை கிரிவல குழு செயலாளர் நட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.