/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில்களில் சித்ரா பவுர்ணமி பூஜை ; பக்தர்கள் பரவசம்
/
கோவில்களில் சித்ரா பவுர்ணமி பூஜை ; பக்தர்கள் பரவசம்
கோவில்களில் சித்ரா பவுர்ணமி பூஜை ; பக்தர்கள் பரவசம்
கோவில்களில் சித்ரா பவுர்ணமி பூஜை ; பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 23, 2024 10:29 PM
சூலூர் : சித்ரா பவுர்ணமியான நேற்று சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் கோவில், நீலம்பூர் நீலியம்மன் கோவில், சூலூர் மேற்கு அங்காளம்மன், பெரிய மாரியம்மன், கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன், முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நேற்று மாலை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கிராமங்களில் சித்ர குப்த பூஜையை ஒட்டி, பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர்.
கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.