/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கருவலுார் மாரியம்மன் கோவில் சித்திரை பூ குண்டம் திருவிழா
/
கருவலுார் மாரியம்மன் கோவில் சித்திரை பூ குண்டம் திருவிழா
கருவலுார் மாரியம்மன் கோவில் சித்திரை பூ குண்டம் திருவிழா
கருவலுார் மாரியம்மன் கோவில் சித்திரை பூ குண்டம் திருவிழா
ADDED : மே 09, 2024 05:06 AM

ஊட்டி : ஊட்டி பிஷப்டவுன் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கருவலுார் மாரியம்மன் கோவில் பூகுண்ட திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றுதல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, 6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அக்கினி மூட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜையுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த, 7 தேதி மதியம் ஒரு மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பூ குண்டத்தை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டும், விடையாற்று உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை,கோவில் பூசாரி ஜீவேந்திரன், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.