/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளோரின் கலந்த குடிநீர் வினியோகம்
/
குளோரின் கலந்த குடிநீர் வினியோகம்
ADDED : ஜூலை 08, 2024 12:27 AM

பந்தலுார்:பந்தலுாரில் குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதில், வனப்பகுதிகள் மற்றும் தோட்டங்கள் வழியாக வழிந்து ஓடும் மழை நீர் குடிநீர் கிணறுகளில் கலக்கிறது. இதனால், குடிநீர் மாசடைந்து, இதனை பருகும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், நகராட்சி குடிநீர் உதவியாளர்கள் மூலம் தண்ணீர் தொட்டியில் குளோரின் கலந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் உதவியாளர் ஒருவர் கூறுகையில், 'குடிநீர் தொட்டியில் அதற்கு உரிய அளவில், குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், மழை காலத்தில் குடிநீர் பருகும் போது ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் உடல் பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குளோரின் கலந்த குடிநீர் பயன்படுத்த முன் வர வேண்டும். அதில், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்,' என்றார்.