/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பத்தாம் வகுப்பு தேர்வு; இனிப்பு வழங்கி வாழ்த்து
/
பத்தாம் வகுப்பு தேர்வு; இனிப்பு வழங்கி வாழ்த்து
ADDED : மார் 04, 2025 12:39 AM

பாலக்காடு; கேரளாவில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது, வரும், 26ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில், பாலக்காடு நகரில் உள்ள மாயன் மாடல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு, தேன், கல்கண்டு, முந்திரி ஆகிய இனிப்பு வகைகள் வழங்கி, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இந்து, முதல்வர் லதா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேர்வுக்கு தொலைவில் இருந்து வந்த மாணவர்களுக்காக, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாகன வசதி செய்து கொடுத்தது.