
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்;பந்தலுார் தேவாலா முதல் சேரம்பாடி, உப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், மழையுடன் மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது.
இதனால், பகல் நேரங்களிலும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்ச உதவியுடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக வரும் வாகன ஓட்டுனர்கள், சாலையின் நிலை தெரியாது சிரமப்பட்டு வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த காலநிலையை வெகுவாக ரசித்து 'போட்டோ' எடுத்து சென்றனர்.
தேயிலை தோட்டங்களில் தொடரும் மேகமூட்டமான காலநிலையால், தோட்ட தொழிலாளர்கள் வனவிலங்குகள் இருப்பது கூட தெரியாத நிலையில், அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,' சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையில் வாகனத்தை மித வேகத்துடன் இயக்க வேண்டும்,' என்றனர்.