/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர கலெக்டர் அறிவுரை
/
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர கலெக்டர் அறிவுரை
ADDED : ஜூலை 31, 2024 09:23 PM

ஊட்டி:நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், 31 ம் தேதி முதல் ஆக., 2ம் தேதி வரை,மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது . அதிவேக காற்று வீசுவதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்து பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளது.
மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இருந்த போதிலும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்கவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி பிற மாவட்டம் , பிற மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வரவேண்டும்.
மேலும், ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆகாச பாலம் என்ற இடத்தில் சாலை பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரும் கனரக சரக்கு வாகனங்கள் ( அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தவிர) இன்று 31ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை கோவை, நீலகிரிக்கு வருகை
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதன் பேரில், 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.