தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மினி லாரி மோதி விபத்து கல்லுாரி மாணவர் பலி

மினி லாரி மோதி விபத்து கல்லுாரி மாணவர் பலி

மினி லாரி மோதி விபத்து கல்லுாரி மாணவர் பலி


ADDED : ஜூலை 17, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காட்டிலிருந்து செர்ப்புளச்சேரி நோக்கி மருத்துவக் கழிவுகளை ஏற்றி சென்ற மினி லாரி, நேற்று மதியம் 1:30 மணிக்கு, முண்டூர் ஒன்பதாம் மைல் பகுதியில் சென்றது.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நடந்து சென்ற கல்லுாரி மாணவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், பாலக்காடு முண்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ., படிக்கும், பரக்குன்னம் பகுதியை சேர்ந்த ஜாகீர் அப்பாஸ் என்பவரது மகன் முகமது பர்ஹான், 19, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் முகமது ரசல் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மாணவர்கள், அகமது சிபில், முகமது ரஷித், முகமது ஹாசிப் ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். விபத்து குறித்து கோங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காசர்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் அமீர், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us