தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அபாய மரங்களால் கல்லுாரி மாணவர்கள் அச்சம்

அபாய மரங்களால் கல்லுாரி மாணவர்கள் அச்சம்

அபாய மரங்களால் கல்லுாரி மாணவர்கள் அச்சம்


ADDED : ஜூலை 16, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 05:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் காணப்படும் அபாயகரமான மரங்களால் பாதிப்பு ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும்.

ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலை வகுப்புகளில், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த கட்டடம், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொலிவுப்படுத்தப்பட்டது.

கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு பழமையான கற்பூர மரங்கள் அபாயகரமான நிலையில் உள்ளன. பலத்த காற்றுக்கு மரக்கிளைகள் உடைந்து விழும் நிலையிலும் உள்ளன. மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வந்து செல்லும் பகுதியில் அபாயகரமான மரங்கள் இருப்பதால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மரங்களால் கல்லுாரியின் பாரம்பரிய கட்டடத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லுாரி நிர்வாகம் மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us