/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதிமீறிய கட்டுமான பணி முதல்வருக்கு புகார் மனு; கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
/
விதிமீறிய கட்டுமான பணி முதல்வருக்கு புகார் மனு; கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
விதிமீறிய கட்டுமான பணி முதல்வருக்கு புகார் மனு; கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
விதிமீறிய கட்டுமான பணி முதல்வருக்கு புகார் மனு; கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
ADDED : பிப் 21, 2025 10:38 PM
குன்னுார்; குன்னுார் அட்டடி பகுதியில் விதிமீறி கட்டப்படும் கட்டடம் குறித்து, மாநில முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாயம் காரணமாக கட்டடங்கள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
எனினும், பிரம்மாண்ட கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னுார் அட்டடி நகராட்சி பள்ளி அருகே கட்டப்படும் பிரம்மாண்ட கட்டடம், சட்ட விரோதமாக கட்டப்படுவதாக, ஏற்கனவே 'கன்சர்வ் எர்த்' அமைப்பு சார்பில் மாநில முதல்வருக்கு புகார் அனுப்பப்பட்டது. இதனை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு தடை விதித்து சென்றனர்.
எனினும் இந்த பகுதியில் மீண்டும், ஆளும் கட்சியினர் முக்கிய நிர்வாகியின் ஆதரவுடன் கட்டுமான பணிகள் அனுமதியின்றி நடப்பதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
'கன்சர்வ் எர்த்' அமைப்பு நிர்வாகி முபாரக் கூறுகையில், ''அட்டடி பகுதியில் சட்டவிரோதமாக பள்ளி அருகே இந்த கட்டடம் கட்டப்படுவதால், மழை காலத்தில் பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும் சில அதிகாரிகள்; ஆளும் கட்சி நிர்வாகியின் மறைமுக உத்தரவால், பணிகள் நடந்து வருகிறது. இங்குள்ள விதிமீறில்கள் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.
நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,''அட்டடி பகுதியில் நடந்து வரும் கட்டட பணி சில விதிமீறல்களால் நிறுத்தப்பட்டது. வழிபாட்டு தலம் கட்டுவதற்கு வருவாய் துறை அனுமதி வழங்குவதால் மற்ற விபரங்கள் அவர்களுக்கு தெரியும். எனினும் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.