/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டலில் கெட்டுப்போன பிரியாணி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்
/
ஓட்டலில் கெட்டுப்போன பிரியாணி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்
ஓட்டலில் கெட்டுப்போன பிரியாணி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்
ஓட்டலில் கெட்டுப்போன பிரியாணி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்
ADDED : மே 09, 2024 05:04 AM
ஊட்டி, : ஊட்டியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த செந்தலை பெருமாள் சமீபத்தில் பணியிட மாற்றம் காரணமாக, சென்னைக்கு சென்று விட்டதால், அவரின் மனைவி லியோ தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், லியோ குடியிருப்பு அருகில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் மகன் பிளஸ்-டூ தேர்ச்சி பெற்றார். அவர் ஊட்டி நகரில் உள்ள 'பால்ஸ்' ஓட்டலில், 2 பிரியாணி வாங்கி வந்து, லியோ குடும்பத்தினருக்கு கொடுத்து 'ட்ரீட்' வைத்துள்ளார்.
அப்போது, பிரியாணி உட்கொள்ள ஆசைப்பட்ட லியோவின் குழந்தைகள், பிரியாணியை பிரித்து தட்டில் கொட்டியவுடன் துர்நாற்றம் வீசியது. பிரியாணியை எடுத்து கொண்டு ஓட்டலுக்கு சென்ற லியோ இது குறித்து கேள்வி கேட்டுள்ளார். ஓட்டல் நிர்வாகத்தினர் அதற்குரிய பணத்தை கொடுத்துள்ளனர். எனினும், கெட்டுப்போன பிரியாணியை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்பு உள்ளது என்பதால், லியோ இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது, ''சம்பந்தப்பட்ட ஓட்டல் குறித்து புகார் வந்துள்ளது. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.