/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோர்ட் உத்தரவுகளை மீறி பாறைகள் உடைக்கும் பணி முன்னாள் கூடுதல் தலைமை செயலர் கலெக்டரிடம் புகார்
/
கோர்ட் உத்தரவுகளை மீறி பாறைகள் உடைக்கும் பணி முன்னாள் கூடுதல் தலைமை செயலர் கலெக்டரிடம் புகார்
கோர்ட் உத்தரவுகளை மீறி பாறைகள் உடைக்கும் பணி முன்னாள் கூடுதல் தலைமை செயலர் கலெக்டரிடம் புகார்
கோர்ட் உத்தரவுகளை மீறி பாறைகள் உடைக்கும் பணி முன்னாள் கூடுதல் தலைமை செயலர் கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 26, 2024 01:47 AM

குன்னுார்;குன்னுார் அருகே கோர்ட் உத்தரவுகளை மீறி, தனியார் தோட்டத்தில் பொக்லின் பயன்படுத்தி சாலை அமைத்து, பாறைகள் உடைக்கும் பணிகள் குறித்து, கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கட்டடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. பொக்லின் பயன்படுத்தவும் முறையாக அனுமதி பெற்று விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எனினும் சில இடங்களில் விவசாயம் என்ற போர்வையில், பொக்லின் பயன்படுத்த அனுமதி பெற்று மலை பகுதியை அழித்து, கட்டடங்கள் கட்டப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் எடப்பள்ளி இளித்தொரை கிராமத்தில். மலையில் சாலை அமைத்தும், பாறைகள் உடைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக, நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், முன்னாள் கூடுதல் தலைமை செயலர் சுர்ஜித் கே சவுத்ரி மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளார். அவர், கூறியதாவது:
குன்னுார் எடப்பள்ளி இளித்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில், இரவு நேரத்தில் விதிகளை மீறி பொக்லின் பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் பாறைகள் வெடிக்க ஐகோர்ட் தடை விதித்த போதிலும், அதனை மீறி, இங்கு பாறையை வெடிக்க வைக்க டிராக்டரில் ஆழமான துளைகள் போட்டு உடைக்கும் பணி நடந்து வருகிறது. செங்குத்தாக, 10 அடி உயரத்திற்கும் 40 அடி அகலத்திற்கும் மண் தோண்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் மரங்கள் வெட்டப்பட்டபோதும் வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
இதனை கண்டுகொள்ளாத ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கு நேற்று மனு அனுப்பி உள்ளோம்.
மாவட்ட நிர்வாகம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு சுர்ஜித் கே சவுத்ரி கூறினார். வருவாய் துறையினர் கூறுகையில்,'எடப்பள்ளி இளித்தொரை அருகே குறிப்பிட்ட பகுதியில் நடந்த விதிமீறல் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கலெக்டர் உத்தரவுபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

