/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில சாரண, சாரணியர் பயிற்சி நிறைவு
/
மாநில சாரண, சாரணியர் பயிற்சி நிறைவு
ADDED : ஜூன் 01, 2024 01:42 AM

குன்னுார்;குன்னுார் ஸ்டேன்லி பார்க் அருகே உள்ள சாரண சாரணியர் இயக்க மாநில அளவிலான பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
குன்னுார் ஸ்டேன்லி பார்க் பகுதியில் உள்ள சாரண, சாரணியர் மையத்தில் இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் கடந்த மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து, 31ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடந்தது.
இதில், 'அடிப்படை, முன்னோடி, இமய கலை,' எனப்படும் மூன்று வகையான பயிற்சிகள் தலா ஏழு நாட்களுக்கு அளிக்கப்பட்டது.
'ஐந்து முதல் 10 வரையிலான குருளையர் பயிற்சி; 10 முதல் 16 வயதில் ஆன சாரணர் பயிற்சி; 15 முதல் 25 வயது வரையிலான திரி சாரணியர் பயிற்சி,' ஆகியவை, 32 மாவட்டங்களை சேர்ந்த, 600 ஆசிரியர், ஆசிரியருக்கு அளிக்கப்பட்டன.
அதில், பாம்பு நடனம், முதலுதவி கட்டுதல், குருளையர் வரவேற்பு, நெருப்பு வளையத்தில் மீட்பு, கமாண்டோ பிரிவு உட்பட பல்வேறு சிறப்பு பயிற்சிகளும், பேரிடர் மீட்பு மலையேற்ற நடைபயணம் போன்றவை நடந்தது.
இறுதி நாள் விழாவில், பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை ஆணையரான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்,''இது போன்ற பயிற்சிகள் மாணவர்களை நல்வழிப்படுத்த வழி வகுக்கிறது. நீலகிரியில் அனைத்து பள்ளிகளிலும் சாரண சாரணியர் பயிற்சி அளித்த சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
விழாவில் மாநில பயிற்சி ஆணையர் தேன்மொழி, மாநில அமைப்பு ஆணையர் கோமதி, திரி சாரணியர் மாநில ஆணையர் டாக்டர் அலமேலு, பத்மாவதி முன்னிலை வகித்தனர்.
விழாவை மாவட்ட செயலாளர் கணேசன் ஒருங்கிணைத்தார். 25 பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர்.

