/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு சுவர்களில் காங்., பேனர் உள்ளூர் மக்கள் அதிருப்தி
/
அரசு சுவர்களில் காங்., பேனர் உள்ளூர் மக்கள் அதிருப்தி
அரசு சுவர்களில் காங்., பேனர் உள்ளூர் மக்கள் அதிருப்தி
அரசு சுவர்களில் காங்., பேனர் உள்ளூர் மக்கள் அதிருப்தி
ADDED : செப் 02, 2024 02:21 AM

ஊட்டி;மாவட்ட சுற்றுலா அலுவலக தடுப்பு சுவரில் காங்., கட்சி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.
'மாநிலம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் அரசு தடுப்பு சுவர்களில் அரசியல் கட்சியினர் உட்பட, தனியார் விளம்பரம் எழுத கூடாது; பேனர் வைக்க கூடாது,' என்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில், ஊட்டியில் நேற்று நடந்த காங்., கமிட்டியின் கலந்தாய்வு கூட்டத்தின் விளம்பர பிளக்ஸ் பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன.
அதில், கூட்டம் நடந்த அரங்கத்தின் எதிரே, மாவட்ட சுற்றுலா அலுவலக தடுப்பு சுவரில் 'பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது உள்ளூர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மக்கள் கூறுகையில்,' பொது மக்கள் சிறிய பேனர்களை அரசு சுவர்களின் வைத்தால் உடனடியாக அகற்றும் அதிகாரிகள், அரசின் உத்தரவை மீறி வைக்கப்பட்ட இத்தகைய பேனர்களை கண்டு கொள்ளவில்லை.
எதிர்வரும் நாட்களில் இது போன்ற விதிமீறல்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.