ADDED : ஜூலை 22, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: காங்., தலைவர் ராகுல் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஊட்டி நகர காங்., கட்சி சார்பில், ஏ.டி.சி.,யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி நகர காங்., தலைவர் நித்திய சத்யா தலைமை வகித்தார்.
* பந்தலுார் நெல்லியாளம் நகர காங்., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு,தலைவர் ஷாஜி தலைமை வத்தார். மாநில செயலாளர் அனஸ்எடாலத், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன் முன்னிலை வகித்து பேசினர்.
* கோத்தகிரி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர்கள், பில்லன், டாக்டர் கமலா சீராளன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ராகுல் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
