/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து முன்னணி முடிவு
/
60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து முன்னணி முடிவு
60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து முன்னணி முடிவு
60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து முன்னணி முடிவு
ADDED : ஆக 06, 2024 06:05 AM

சோமனூர்: சோமனூர் சுற்றுவட்டாரத்தில், 60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது, என, ஹிந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சோமனூர் நகர் மற்றும் வடக்கு, தெற்கு ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் சோமனூரில் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில், அனைத்து பகுதிகளிலும், கமிட்டிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது. கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். அதுவரை ஹிந்து முன்னணி போராடும். குறைந்து வரும் ஹிந்து மக்களின் எண்ணிக்கை தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதை உணர்த்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும், என்றார்.
இதை தொடர்ந்து, சோமனூர் நகர், வடக்கு, தெற்கு, சாமளாபுரம் ஒன்றியங்களில், 60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடுவது, என, தீர்மானிக்கப்பட்டது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வக்குமார், லோக சந்திர பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.