/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் கட்டுமான பொருட்கள்; வாகனங்கள் நிறுத்த இடையூறு
/
சாலையில் கட்டுமான பொருட்கள்; வாகனங்கள் நிறுத்த இடையூறு
சாலையில் கட்டுமான பொருட்கள்; வாகனங்கள் நிறுத்த இடையூறு
சாலையில் கட்டுமான பொருட்கள்; வாகனங்கள் நிறுத்த இடையூறு
ADDED : செப் 12, 2024 08:33 PM

கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு 'இன்கோ' சந்திப்பில், கட்டுமான பொருட்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் நிறுத்த இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னுார் உட்பட, சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு, இவ்வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. தவிர, பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
அதில், இன்கோ தொழிற்சாலையின் மேல் பகுதியில் அமைந்துள்ள பாரதி நகர் கிராமத்திற்கு, நடுஹட்டி ஊராட்சி சார்பில், சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, கட்டுமான பொருட்கள் சாலையோரத்தில் கொட்டப்பட்டன.
பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜல்லி மற்றும் மணல் உள்ளிட்ட, கட்டுமான பொருட்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் நிறுத்துவதற்கும், மக்கள் சென்று வருவதற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், கட்டுமான பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.