/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.21 கோடியில் கட்டுமான பணிகள்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.21 கோடியில் கட்டுமான பணிகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.21 கோடியில் கட்டுமான பணிகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.21 கோடியில் கட்டுமான பணிகள்
ADDED : மே 29, 2024 11:39 PM

மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவிலில், 21 கோடி ரூபாய்க்கு, திருப்பணிகள் மற்றும் கட்டுமானப்பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் அருகே, கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு, ஆறு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், திருவிழாவின் போது பக்தர்கள் அதிக அளவில் வருவதால், அவர்கள் ஓய்வெடுக்க வசதியாக, கோவிலை சுற்றி மண்டபங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இது குறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறியதாவது:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம், உபயதாரர்கள் வாயிலாக, திருப்பணிகள் நடைபெறுகின்றன. ராஜகோபுரத்தில் இருந்து கோவிலை சுற்றி சுற்றுப் பிரகார மண்டபம், சுற்றுச்சுவர் ஆகியவை கட்டும் திருப்பணிகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகின்றன. பவானி ஆற்றில் பக்தர்கள் பாதுகாப்புடன் குளிக்க தடுப்பும், படித்துறையும் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு பெண்கள் உடை மாற்று அறைகள், கழிப்பிடம் ஆகியவை கட்டப்படுகின்றன. ஆற்றில் இருந்து கோவில் வரை பக்தர்கள் நடந்து வருவதற்கு, நடைபாதை மண்டபம் கட்டப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் கட்டுதல் என, பல கட்டுமானப் பணிகள், மொத்தமாக, 21 கோடி ரூபாய் செலவில் நடைபெறுகின்றன. இப்பணிகள், குறிப்பிட்ட காலத்திற்குள், செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.