/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு
/
மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு
மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு
மின்வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நுகர்வோர் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 27, 2024 08:51 PM
ஊட்டி ; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சேகர் அறிக்கை:
குன்னுார் சாலை ஆவின் வளாகத்தில் இன்று காலை, 11:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரை ஆவின் வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர், ஊட்டி அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், கமர்சியல் சாலை, லேக் வியூ, எட்டின்ஸ் சாலை, தமிழகம், ஆஸ்பிடல் சாலை, தலைகுந்தா, தும்மனட்டி, தேனாடுகம்பை, பைக்காரா, எம்.பாலாடா மற்றும் எல்லநள்ளி பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.