/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீப்பிடித்த கன்டெய்னர் லாரி பல லட்சம் பொருட்கள் சேதம்
/
தீப்பிடித்த கன்டெய்னர் லாரி பல லட்சம் பொருட்கள் சேதம்
தீப்பிடித்த கன்டெய்னர் லாரி பல லட்சம் பொருட்கள் சேதம்
தீப்பிடித்த கன்டெய்னர் லாரி பல லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : மே 26, 2024 12:29 AM

ஊட்டி:ஊட்டி, குன்னுார் எம்ஆர்.சி., ராணுவ மையத்தில், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்கி பணிபுரிகின்றனர். இங்கு ஓய்வு பெறும் அதிகாரிகள் அல்லது இடமாறுதலாக செல்லும் ராணுவ வீரர்கள், தங்களது வீடுகளில் உள்ள கார், இருச்சக்கர வாகனங்கள் உட்பட, வீட்டு பொருட்களை கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்வது வழக்கம்.
நேற்று, பெங்களூரூவில் இருந்து, குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ மையத்திற்கு வீட்டு பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பியில் உரசி, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சம்பவ பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து பொருட்களை மீட்டனர். இருப்பினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.