/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேரங்கோடு படைச்சேரி பகுதி மக்கள் பயன்படுத்தும் மாசடைந்த குடிநீர்
/
சேரங்கோடு படைச்சேரி பகுதி மக்கள் பயன்படுத்தும் மாசடைந்த குடிநீர்
சேரங்கோடு படைச்சேரி பகுதி மக்கள் பயன்படுத்தும் மாசடைந்த குடிநீர்
சேரங்கோடு படைச்சேரி பகுதி மக்கள் பயன்படுத்தும் மாசடைந்த குடிநீர்
ADDED : மார் 21, 2024 10:50 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் படைச்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள, இந்த கிராமத்தில் நீர் ஆதாரங்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால், போதிய குடிநீர் வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதில், பொது குடிநீர் கிணற்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர், சேறும் சகதியுமாக மாறி மஞ்சள் நிறத்தில், மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இது போன்ற மாசடைந்த தண்ணீரைபருகுவதால் மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளை சிறை பிடிப்போம்,' என்றனர்.