/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் தொடரும் மழை; சீகூர் ஹல்லாவில் வெள்ளப்பெருக்கு
/
கூடலுாரில் தொடரும் மழை; சீகூர் ஹல்லாவில் வெள்ளப்பெருக்கு
கூடலுாரில் தொடரும் மழை; சீகூர் ஹல்லாவில் வெள்ளப்பெருக்கு
கூடலுாரில் தொடரும் மழை; சீகூர் ஹல்லாவில் வெள்ளப்பெருக்கு
ADDED : மே 24, 2024 10:15 PM

கூடலுார் : முதுமலை மசினகுடியில் தொடரும் மழையின் காரணமாக, மாயார் ஆற்றின் கிளை ஆறாக சீகூர் ஹல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கூடலுார், முதுமலை, மசினகுடி பகுதிகளில், நடப்பு ஆண்டு ஜன., முதல் ஏப்., வரை கோடை மழை ஏமாற்றி வந்தது. இதனால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து, வனப்பகுதிகள் பசுமை இழந்து காணப்பட்டது. வனவிலங்குகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல், கோடை மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் தணிந்து, மிதமான காலநிலை ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நிலத்தடிநீர் உயர்ந்து வருகிறது.
முதுமலை, மசினகுடி பகுதிகளில் பெய்து வரும், கோடை மழையால் இங்குள்ள நீர்நிலைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானி ஆற்றின் முக்கிய கிளையான மாயார் ஆற்றிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சீகூர்ஹல்லா உள்ளிட்ட மாயார் ஆற்றின் கிளை ஆறுகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'மசினகுடி பகுதியில் தொடரும் மழையால் வனப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமைக்கு மாறி உள்ளது. நீர் நிலைகளையும் நீர் வரத்து அதிகரித்து வனவிலங்குகளுக்கு உணவு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.
மழையின் போது, சீகூர் ஹல்லா உள்ளிட்ட ஆறுகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, மக்கள் மழையின் போது ஆற்றுகளை கடந்து செல்லவோ, ஆற்றின் கரைகளுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

