/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் கோடை மழை அதிகரிக்கும் தேயிலை மகசூல்
/
தொடரும் கோடை மழை அதிகரிக்கும் தேயிலை மகசூல்
ADDED : மே 15, 2024 12:13 AM

கூடலுார்;கூடலுாரில் தொடரும் கோடை மழையினால், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்திருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கூடலுார் பகுதியில் நடப்பாண்டு துவக்கம் முதல் கோடைமழை ஏமாற்றியது. தொடர்ந்து, ஏற்பட்ட வறட்சியில், குடிநீர், பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், பசுந்தேயிலை உற்பத்தியும் பாதிக்கபட்டது. ஏற்கனவே, நிரந்தர விலையின்றி சிரமப்பட்டு வரும் விவசாயிகள், உற்பத்தி பாதிப்பால் கடும் நஷ்டமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் நீர்நிலைகளில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து, பசுந்தேயிலை உற்பத்தி அதிகரிக்க துவங்கியுள்ளது.
மகிழ்ச்சி அடைந்துள்ள தேயிலை விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடை மழை ஏமாற்தியதால், பசுந்தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டது. சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் போதிய வருவாய் இன்றி சிரமப்பட்டனர். தற்போது பெய்து வரும் கோடை மழையினால் பசுந்தேயிலை உற்பத்தி, அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,' என்றனர்.

