/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அம்மா உணவகத்தில் உணவு வழங்கியதில் சர்ச்சை
/
அம்மா உணவகத்தில் உணவு வழங்கியதில் சர்ச்சை
ADDED : மே 29, 2024 10:17 PM
குன்னுார்,: குன்னுார் அம்மா உணவகத்தில் மூதாட்டிக்கு 'பிளாஸ்டிக்' பையில் உணவு வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் மவுண்ட் ரோட்டில் வண்டிபேட்டை பகுதியில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து உணவு உட்கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று இங்கு வந்த மூதாட்டி ஒருவருக்கு 'பிளாஸ்டிக்' பையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. அங்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கிருந்த பணியாளர்கள், 'அவர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பையில் போட்டு உணவு வழங்குமாறு கேட்டதால் வழங்கினோம்,' தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நீலகிரியில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் பையில் உணவு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குன்னுார் ஆர்.டி.ஓ.,சதீஷ்குமார் கூறுகையில்,''தற்போது நகராட்சி கமிஷனர் விடுமுறையில் உள்ளதால், இந்த சம்பவம் குறித்து பொறியாளரிடம் தெரிவிப்பதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.