/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 18, 2024 11:14 PM
ஊட்டி;நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் அறிக்கை:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் கோயம்புத்துார் ராமலிங்க கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024--25ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடக்கிறது.
பயிற்சி காலம் ஒரு வருடமாகும். இப்பயிற்சி இரண்டு பருவ முறை கொண்டதாகும். பயிற்சியில் சேர, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டய படிப்பு தேர்ச்சி, பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.
2024ம் ஆண்டு ஆக., 1ம் தேதி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஜூலை 19ம் தேதி மாலை, 5:00 மணி வரை அதிகார பூர்வ இணையதளமான www.tncu.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு 0422--2442186 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.