sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

/

'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

'கூடலுாரில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்'; நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


ADDED : மார் 04, 2025 11:18 PM

Google News

ADDED : மார் 04, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; 'கூடலுார் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்,' என, மன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார்.

கூடலுார் நகர மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சுவீதாஸ்ரீ முன்னிலை வகித்தார்.

உஸ்மான்: கடந்த மாதம் நகர மன்ற கூட்டம் ஏன் நடத்தவில்லை.

தலைவர்: 15ம் தேதி கூட்டம் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 25ம் தேதி வரை 'சப்ஜெக்ட்' தயார் செல்லவில்லை. இதனால், கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

உஸ்மான்: தலைவர் கூட்டத்தை நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்க வேண்டும். இனி மன்ற கூட்டத்தை, மாத துவக்கத்தில் நடத்த வேண்டும்.

அனுப்கான்: நகராட்சி பகுதியில், வணிகவளாக கட்டடங்களுக்கு முறையாக வரி கணக்கிடப்படவில்லை. குறைபாடுகள் உள்ளது. இதனால், அதிக வரி செலுக்க வேண்டிய நிலையில் வியாபாரிகள் உள்ளனர்.

ராஜேந்திரன்: கட்டடம் அளவீடு செய்வதில் தவறு நடந்திருக்கலாம். முறையாக அளவீடு செய்திருக்க வேண்டும்.

வருவாய் ஆய்வாளர் எமிமாள்: கட்டட அளவீடு செய்ததில் எந்த தவறும் நடக்கவில்லை. பலர் வீடுகளை வணிக வளாகமாக பயன்படுத்தி வந்தது, கண்டுபிடிக்கப்பட்டு அவை வணிக வளாகமாக மாற்றப்பட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.

அனுப்கான்: கட்டட வரி உயர்வை மறுபரிசீலனை வேண்டும்.

வெண்ணிலா: காந்திநகர் பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியில், தண்ணீர் வீணாவதை தடுத்து, பயன்படுத்த வேண்டும்.

பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன்: இது தொடர்பாக திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும்.

கவுன்சிலர்கள்: கோடையில், அனைத்து பகுதிகளிலும், தடையின்றி குடிநீர் கிடைக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us