/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விழும் அபாயத்தில் விரிசலான மண் குடியிருப்பு
/
விழும் அபாயத்தில் விரிசலான மண் குடியிருப்பு
ADDED : ஜூன் 29, 2024 01:50 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரியசோலை பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.
இங்கு, 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. ஊராட்சி மூலம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டு வேய்ந்த குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது.
தற்போது, அதில், பல குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்து விட்ட நிலையில், ஜெயா என்ற பழங்குடியின பெண்ணின் குடியிருப்பு சுவற்றில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விடும் நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து குடியிருக்க முடியாத நிலையில் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'மழையில் வீடு இடியாமல் பாதுகாக்கும் வகையிலான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இது போன்ற குடியிருப்புகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டியது அவசியம் ஆகும்,' என்றனர்.