/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட ஹாக்கி போட்டி கிரசன்ட் பள்ளி வெற்றி
/
மாவட்ட ஹாக்கி போட்டி கிரசன்ட் பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 09, 2024 01:23 AM

ஊட்டி;ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் கிரசன்ட் பள்ளி வெற்றி பெற்றது.
ஊட்டியில், 'தமிழ்நாடு பள்ளிகளுக்கான ஹாக்கி அமைப்பு' சார்பில், மாவட்ட அளவிலான போட்டி நடந்தது.
அதில், குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, உபதலை அரசு மேல்நிலைப்பள்ளி, சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளி, பிருந்தாவன் பள்ளி, கிரசன்ட் பள்ளி, எடப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, டிபன்ஸ் மெட்ரிக்., பள்ளி ஆகிய ஏழு பள்ளிகள் பங்கேற்று விளையாடின.
இறுதி போட்டிக்கு, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி; கிரசன்ட் பள்ளி ஆகிய அணிகள் தகுதி பெற்று விளையாடின. அதில், 3-2 கோல் கணக்கில் கிரசன்ட் பள்ளி வெற்றி பெற்றது. குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம்: பிருந்தாவன் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, தேசிய தகவல் மைய இயக்குனர் கணேஷ் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கோபி ஆகியோருக்கு, கிரசன்ட் பள்ளி தாளாளர் உமர்பரூக் பாராட்டு தெரிவித்தார். வெற்றி அணி மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.