/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குற்றவியல் கோர்ட் உத்தரவு :தந்தையிடமிருந்து குழந்தை மீட்பு
/
குற்றவியல் கோர்ட் உத்தரவு :தந்தையிடமிருந்து குழந்தை மீட்பு
குற்றவியல் கோர்ட் உத்தரவு :தந்தையிடமிருந்து குழந்தை மீட்பு
குற்றவியல் கோர்ட் உத்தரவு :தந்தையிடமிருந்து குழந்தை மீட்பு
ADDED : ஜூலை 08, 2024 12:14 AM
ஊட்டி:நீலகிரியில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு கொண்டு செல்ல முயன்ற குழந்தையை, நீதிமன்ற உத்தரவின் பேரில், குழந்தை மீட்பு குழுவினர் மீட்டனர்.
கூடலுார் வட்டம், தேவாலா கரியசோலை பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும், உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக அந்த வாலிபர் இளம் பெண்ணிடமிருந்து ஒரு வயது குழந்தையை துாக்கி கொண்டு உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு புறப்பட்டார். அதிர்ச்சி அடைந்த இளம் பெண், நீலகிரி மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவில் ஆஜராகி, 'தனது குழந்தை கணவரால் வலுக்கட்டாயமாக பறித்து செல்லப்பட்டது,' என, புகார் அளித்தார். தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி செந்தில்குமார் குழந்தை மீட்பு குழுவை அமைத்தார். அதில், வக்கீல் விஜயன் நீதிமன்ற ஆணையராகவும், நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகினி தேவி, எஸ்.ஐ., லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தனி குழுவினர் கோவை வரை சென்ற வாலிபரிடம் இருந்து, குழந்தையை நேற்று முன்தினம் மீட்டு, அங்குள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
சட்டப் பணிகள் ஆணை குழுவினர் கூறுகையில்,'குழந்தைகளை காக்க எப்போதுமே நீதிமன்றம், சமூக நல துறை மற்றும் காவல் துறை தயாராக உள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு மையத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.