/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குணில் ஆற்றில் தென்பட்ட முதலை: அச்சத்தில் மக்கள்
/
குணில் ஆற்றில் தென்பட்ட முதலை: அச்சத்தில் மக்கள்
ADDED : மே 19, 2024 11:18 PM

கூடலுார்:கூடலுார்- தொரப்பள்ளி அருகே, குணில் ஆற்றில் முதலை தென்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம், முதல் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், நீரோடைகள் மற்றும் முக்கிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, தொரப்பள்ளி அருகே குணில் பகுதியில் விவசாயப பணிகளில் மேற்கொண்டிருந்த, விவசாயி ஒருவர் காலை, 10:30 மணிக்கு, வழியாக செல்லும் குணில் ஆற்றின் கரையில் முதலை ஓய்வெடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சிறிது நேரத்தில் முதலை, ஆற்றுக்குள் சென்று மறைந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்த மக்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,'குணில் ஆற்றை ஒட்டி, பழங்குடியினர் கிராமம் மற்றும் பிற மக்களின் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளது. ஆற்றின் வெள்ளம் பழங்குடியினர் கிராமத்துக்குள் செல்வதால் மக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆற்றில், தென்பட்டுள்ள முதலை குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் ஆபத்து உள்ளது. எனவே, வனத்துறையினர் அதனை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.

