/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாயார் ஆற்றில் தென்பட்ட முதலை: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
/
மாயார் ஆற்றில் தென்பட்ட முதலை: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
மாயார் ஆற்றில் தென்பட்ட முதலை: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
மாயார் ஆற்றில் தென்பட்ட முதலை: பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : மே 28, 2024 11:57 PM

கூடலுார்:'முதுமலை, மாயார் ஆற்றில் முதலைகள் உலா வருவதால் ஆற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மாயார் ஆறு, வனவிலங்குகளின் குடிநீர் சேமிப்பு செய்யும் முக்கிய நீர் ஆதாரமாகும். தெப்பக்காடு, காரைக்குடி பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் தங்கள் தேவைக்கு ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்றில் முதலைகள் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆற்றுக்குள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கல்லல்லா பாலம் அருகே, மாயாற்றில் நேற்று, காலை முதலை ஒன்று பாறை மீது ஓய்வெடுத்து கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்தி அதனை ரசித்து சென்றனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மாயார் ஆற்றில் முதலைகள், பகல் நேரத்தில் பாறைகள் மற்றும் கரைகளில் ஓய்வெடுப்பது வழக்கமான நிகழ்வாகும்.
அவை மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று, அதற்கு இடையூறு ஏற்படுத்தகூடாது. மீறுபவர்கள் மீது, வனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.