/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்
/
சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்
சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்
சுற்றுலா பயணிகளின் கூட்டம் படகு சவாரி செய்வதில் ஆர்வம்
ADDED : மார் 28, 2024 11:51 PM

ஊட்டி;ஊட்டி படகு இல்லத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், காத்திருந்து படகு சவாரி செய்வதில், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்காவை அடுத்து, படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்வதை தவறுவதில்லை. ஊட்டியில், அதிகப்பட்ச வெப்பநிலை, 22 டிகிரி செல்சியஸாக இருப்பது வழக்கம். தற்போது, 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக உயர்ந்துள்ளது.
சமவெளி பகுதியில் வெப்பநிலை இதை விட கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், தற்போதே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், வார விடுமுறை நாட்கள் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட, படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர்.