/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள்
/
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள்
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள்
ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள்
ADDED : மே 23, 2024 11:43 PM

கோத்தகிரி:கோத்தகிரி குடிமனை ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குடிமனை ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், ஸ்ரீ வெற்றி விநாயகர் மற்றும் கண்ணினமார் அம்மன்கள் கோவில், 50ம் ஆண்டு திருவிழா, கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை ஒட்டி, 19ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, முனியப்பன் பூஜை மற்றும் முனி ஓட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 20ம் தேதி காலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை அம்மனுக்கு அலங்கார பூஜை, 6:00 மணி முதல், 12:00 மணி வரை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பிற்பகல், தொடர்ந்து, தாரை தப்பட்டை முழங்க, மாவிளக்கு ஊர்வலம் இடம்பெற்றது. இரவு, 10:00 மணிக்கு, வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
முக்கிய நிகழ்வாக, 22ம் தேதி, காலை 9:00 மணி முதல், 11:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து, 5:00 மணி வரை, அம்மன் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு, மாலையில், அம்மனை கங்கை கரைசேர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 27ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.