/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரட்டிப்பு பணம் தருவதாக வாலிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசாா் விசாரணை

ADDED : ஜூலை 02, 2024 01:50 AM
ஊட்டி;இரட்டிப்பு வருமானம் தருவதாக கூறி, நீலகிரி வாலிபரிடம், 16 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் பகுதியை சேர்ந்த, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வாட்ஸ் அப் செயலி மூலம் அவருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில், பிட்காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் தருவதாக ஆசை வார்த்தை கூறப்பட்டது. இதை நம்பி அவர், 5000 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதில், அவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைத்தது. இதையடுத்து லட்சக்கணக்கில் இவருடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை மாற்றியுள்ளார்.
ஆனால், அதற்கு பின்னர் இவர் முதலீடு செய்த பணத்திற்கு இரட்டிப்பு தொகை வரவில்லை.
இது குறித்து கேட்டபோது, ஜி.எஸ்.டி., உட்பட பல்வேறு காரணங்களை கூறி தாமதமாக்கி கொண்டே இருந்தனர். இதனால், அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். முதலீடு செய்த பணத்தையாவது எடுக்க முயற்சி செய்தார். அதுவும் முடியவில்லை. இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் கூறுகையில், ''இரட்டிப்பு பணம் தருவதாக வாலிபரிடம், 16 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாறிய வங்கிக் கணக்கை அடையாளம் கண்டு, பணத்தை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்,'' என்றார்.