/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மைதானத்தில் குழிகளால் பாதிப்பு சீரமைத்து தர வீரர்கள் வலியுறுத்தல் சீரத்து தர விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தல்

ADDED : மே 15, 2024 12:14 AM

பந்தலுார்:பந்தலுாரில் உள்ள மைதானத்தில் உள்ள குழிகளை சீரமைக்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் பஜாரை ஒட்டி விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. மைதானத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய நிகழ்ச்சிகளும் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பந்தலுார் பகுதியை சேர்ந்த, விளையாட்டு குழுவினர் மைதானத்தில் கால்பந்து போட்டி நடத்தினர்.
அப்போது போட்டியை ரசிப்பதற்காக ரசிகர்கள் அமரும் வகையிலான வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
விளையாட்டு நிறைவு பெற்ற நிலையில் தற்காலிக அமைப்புகளை அகற்றி சென்ற விளையாட்டு குழுவினர், இதற்காக தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் அப்படியே விட்டு சென்றனர். இதனால் மைதானம் முழுவதும் குழிகளாக மாறி, நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் நபர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
விளையாட்டு வீரர்கள் கூறுகையில், 'இங்கு விளையாட்டு போட்டிகளை நடத்திய குழுவினர் மூலம், குழிகளை மூடுவதற்கு நகாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.