/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த பகுதி: மழைக்கு முன் சீரமைத்தால் பயன்
/
சேதமடைந்த பகுதி: மழைக்கு முன் சீரமைத்தால் பயன்
ADDED : மார் 14, 2025 10:24 PM

கூடலுார்; 'கூடலுார் தேவாலா கைதகொல்லி அருகே, பருவமழையின் போது சேதமடைந்த, சாலையோர தடுப்பு சுவரை பருவ மழைக்கு முன் சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் தேவாலா பகுதியில் கடந்த ஆண்டு மே, 7ம் தேதி பலத்த மழை பெய்து, ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளம் ஏற்பட்டது. கைத கொல்லி வழியாக செல்லும் நீரோடையில், ஏற்பட்ட மழை வெள்ளத்தில், கோழிக்கோடு சாலை பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் சேதமடைந்தது. தொடர்ந்து சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டதுடன், சாலையில் வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க, நெடுஞ்சாலை துறையினர் மண் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக சீரமைத்தனர்.
சாலை, மீண்டும் சேதமடைவதை தடுக்க, அப்பகுதியை நிரந்தரமாக சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர். அதற்கான நடவடிக்கை துவங்கப்படவில்லை. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு பருவமழையின் போது, சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க இதுவரை நடவடிக்கை இல்லை. இரண்டு மாதங்களில் மீண்டும் பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. அப்போது அப்பகுதி நீரோடையில் ஏற்படும் மழை வெள்ளத்தால் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதை தடுக்க நிரந்தரமாக தடுப்பு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.