ADDED : ஏப் 14, 2024 12:50 AM

அ நிறம் | அளவு
நீலகிரி மாவட்டம், கூடலுார் மண்வயல் பகுதியில், பா.ஜ., சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளர் முருகன் பங்கேற்று பேசினார். பழங்குடியின பெண்களிடம், குறைகளை கேட்டறிந்து, 'பிரதமர் மோடி பழங்குடியின மக்களுக்கு கொடுத்துள்ள கவுரவம் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள்' குறித்து விளக்கியதுடன், பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, உறுதி அளித்தார். தொடர்ந்து, பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனமாடி அவர்களை மகிழ்வித்தார்.
பா.ஜ., வேட்பாளர் முருகன் தங்களது பிரச்னைகளை பொறுமையாக கேட்டு, தங்களுடன் இணைந்து நடனம் ஆடியதில் பழங்குடியின பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
