/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேய்ச்சல் நிலமாக மாறிய டேவிஸ் பூங்கா தோட்டக்கலை பராமரித்தால் சிறப்பாகும்

ADDED : ஜூன் 12, 2024 09:46 PM

ஊட்டி,- ஊட்டி டேவிஸ் பூங்கா, போதிய பராமரிப்பு இல்லாமல், மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே, டேவிஸ் பூங்கா அமைந்துள்ளது. ஊட்டி நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. நடைபாதை, புல்வெளி, செயற்கை நீரூற்று உட்பட, சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களுடன், 2021--22ம் ஆண்டு, நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட மையங்களுடன், டேவிஸ் பூங்காவின் அழகையும் கண்டுக்களித்து செல்கின்றனர். தற்போது, பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல், செயற்கை நீரூற்றில் தண்ணீர் இல்லாமலும், பூங்கா புல்வெளியில், புற்கள் வளர்ந்தும் போதிய பராமரிப்பு இல்லாமல், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை, அறவே இல்லாமல் போயுள்ளது.
மக்கள் கூறுகையில், 'கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்த பூங்காவை தோட்டக்கலை துறை பராமரிக்க நடவடிக்கைஎடுத்து, எதிர்வரும் இரண்டாவது சீசனக்காவது, சுற்றுலா பயணிகளுக்காக பூங்காவை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.