/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு
/
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிப்பு: தேயிலை உற்பத்தி தொடர் சரிவு
ADDED : ஏப் 28, 2024 09:06 PM

குன்னுார்;நீலகிரியில் வெயிலின் தாக்கத்தால் பசுந்தேயிலை மகசூல் குறைந்து, தேயிலை உற்பத்தி பாதித்துள்ளது; ஒரே வாரத்தில், 2.24 லட்சம் கிலோ வரத்து குறைந்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 17வது ஏலத்தில், '11.33 லட்சம் கிலோ இலை ரகம், 3.45 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 14.78 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது.
அதில், '8.13 லட்சம் கிலோ இலை ரகம், 2.83 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என 11.06 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனையானது. 10.84 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு, 98.90 ரூபாயாக இருந்தது. விலையில் மாற்றம் இல்லை.
கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில், 2.24 லட்சம் கிலோ வரத்து குறைந்தது.
மொத்தம், 74.14 சதவீதம் தேயிலை தூள் விற்ற நிலையில், 1.89 லட்சம் கிலோ துாள் தேக்கமடைந்தது. ஒரே வாரத்தில், 1.87 கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.
மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்து போதிய தண்ணீர் கிடைக்காததால் பசுந்தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு வரும் பசுந்தேயிலை வரத்து குறைந்து, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால், விவசாயிகள்; உற்பத்தியாளர்கள்; வர்த்தகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

