/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உயிரிழந்த மோப்ப நாய் மில்டன் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
/
உயிரிழந்த மோப்ப நாய் மில்டன் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
உயிரிழந்த மோப்ப நாய் மில்டன் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
உயிரிழந்த மோப்ப நாய் மில்டன் போலீஸ் மரியாதையுடன் அடக்கம்
ADDED : செப் 02, 2024 02:23 AM

ஊட்டி;ஊட்டியில் உயிரிழந்த மோப்ப நாயின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் காவல் துறையில் தனது பணியை சிறப்பாக செய்து கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற மில்டன் என்ற நாய் வயது மூப்பு காரணமாக, நேற்று உயிரிழந்தது.
இந்த நாய், 2011ல் இருந்து, 2021 வரை காவல் துறை பணியில் இருந்த போது, கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டுபிடிக்க பெரும் உதவியாக இருந்துள்ளது. 63 வழக்குகளுக்கு தீர்வு காண உதவி செய்துள்ளது. இறந்த நாயின் உடலுக்கு, ஊட்டி ஏ.டி எஸ்.பி., சவுந்தரராஜன் உட்பட போலீசார் மரியாதை செலுத்தி பட்பயர் பகுதியில் அடக்கம் செய்தனர். இந்த நாயின் உயிரிழப்பு, அதனுடன் பழகிய, இதர மோப்ப நாய்கள் மற்றும் போலீசாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.