/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 11 போர்வெல்கள் போட முடிவு
/
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 11 போர்வெல்கள் போட முடிவு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 11 போர்வெல்கள் போட முடிவு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 11 போர்வெல்கள் போட முடிவு
ADDED : மே 23, 2024 10:58 PM
சூலூர்:சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, 11 போர் வெல்கள் போட ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
மற்ற பயன்பாடுகளுக்கு, 171 போர்வெல்கள் அமைக்கப்பட்டு உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஒன்றியத்தில் புதிதாக, 11 போர்வெல்கள் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த ஊராட்சிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது, மக்கள் தொகை அடிப்படையில் அந்த பகுதிகளில் போர் வெல்கள் போட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்காக, கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிர்வாகத்தினர் கூறினர்.