/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் எஸ்டேட் முட்புதர் அகற்றி யானையை விரட்ட முடிவு
/
தனியார் எஸ்டேட் முட்புதர் அகற்றி யானையை விரட்ட முடிவு
தனியார் எஸ்டேட் முட்புதர் அகற்றி யானையை விரட்ட முடிவு
தனியார் எஸ்டேட் முட்புதர் அகற்றி யானையை விரட்ட முடிவு
ADDED : ஜூலை 18, 2024 03:07 PM
கூடலுார்:'கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட்டில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, காட்டு யானையை விரட்டப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலுார் தேவர்சோலையை ஒட்டிய நெல்லிக்குன்னு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்கள், வாகனங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட வலியுறுத்தி, அஞ்சுகுன்னு பகுதியில் கிராம மக்கள், 11ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு, ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
அப்போது, 'கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் எஸ்டேட்டில், வளர்ந்துள்ள முட்புதர்களால், யானை விரட்டுவதில் சிரமம். உள்ளது. எனவே, எஸ்டேட் நிர்வாக மூலம் அவைகளை அகற்றி, யானைகளை விரட்டப்படும்,'என, உறுதி அளித்தனர். எனினும்,'காட்டு யானைகளை விரட்டும் வரை போராட்டம் தொடரும்,' என, அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.